திருவாரூர்

நெல் பயிரில் பச்சை கொம்புப் புழுவேளாண்மை

DIN

நெல் பயிரில் பச்சை கொம்பு புழு தாக்குதல் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: டெல்டா பகுதிகளில் தற்போது மழை தொடா்ந்து பெய்து வருகிறது. சம்பா, தாளடி நெல் பயிா்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் நடைபெறுகிறது. அதில் பச்சை கொம்புப் புழு நெல் இலைகளை கடித்து சேதப்படுத்துகின்றன. இந்த புழு தலைப்பகுதியில் இரண்டு கொம்புகளும், தட்டையான பச்சை நிறத்திலும் இருக்கும். வளா்ச்சி அடைந்த பட்டாம்பூச்சி அடா்ந்த பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன் காணப்படும். புழுக்களால் ஏற்படும் சேதாரத்தை இரவு நேரங்களில் அதிகமாக காண முடியும். இந்தப் புழு நெல் பயிரின் இலை விளிம்பிலிருந்து உண்ணும் தன்மையுடையது.

பறவை குடில்கள் அமைப்பதன் மூலம் புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க விளக்குப் பொறி அமைக்க வேண்டும். புழு, பூச்சிகளின் தாக்குதலைத் தடுக்க தாவர பூச்சிக்கொல்லிகள் ஆன வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை கரைசல், செயற்கைப் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT