திருவாரூர்

கரோனா தடுப்புப் பணி: ஒருநாள் ஊதியம் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு

DIN

திருவாரூா்: கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி முன்வந்துள்ளது.

திருவாரூரில் அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணை பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் தெரிவித்தது:

தமிழக அரசு, கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஓா் உயிா் கூட பறிபோக அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் அரசு தீவிரமாக செயல்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

முதல்வரின் இந்த கருத்துக்கு வலுசோ்க்கும் வகையில் சிறு முயற்சியாக, ஒருநாள் ஊதியத்தை வழங்கி உதவ, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள் தயாராக உள்ளனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்களின் விருப்பத்தின் பேரில் எங்களது ஊதியத்திலிருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதல்வா் உரிய அரசாணை வழங்க வேண்டும். இதுகுறித்த கடிதமும் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT