திருவாரூர்

கூத்தாநல்லூர்: பெரிய பள்ளிவாயில் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

26th Mar 2021 07:49 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர், பெரிய பள்ளிவாயில், மதரஸா பைஜுல் பாக்கியாத் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், பெரியப் பள்ளிவாயில் வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு, அரபிக் கல்லூரியின் முதல்வர் மெளலானா மெளலவி அல்ஹாஜ் டி.எம். ஜாகிர் ஹுசைன் ஆலிம் தலைமை வகித்தார். 
பெரிய பள்ளிவாயில் இமாம் ஏ.எல்.முஹம்மது அலி அன்வாரி, பாக்கவி ஆலிம், திருவாரூர் மாவட்ட அரசு காஜி ஏ.எஸ்.எம்.சர்தார் முஹையித்தீன் ஆலிம் உலவிய்யு, பெரியப் பள்ளி வாயில் தலைவர் என்.எம்.ஏ.சிஹாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம். முஹிபுல்லாஹ் ஃபைஜானி கிராஅத் ஓதினார். 
தாஹிர் அலி, மன்சூர் அலி ஆகியோர் நபிகள் நாயகத்தின் புகழ் பாடினர். பி.கே.எம். அப்துல் மாலிக் வரவேற்றார்.

ஜெ. அப்துல் ஹக்கீம், ஏ.அப்துர் ரஹ்மான், எம்.முஜிபுல்லாஹ் மற்றும் எஸ்.என். நெய்னா முஹம்மது உள்ளிட்ட 4 பேருக்கும், ஈரோடு, தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியரும், மஜ்லிசூல் மதாரிஸுல் அரபியா துணைச் செயலாளருமான ஹஜ்ரத் ஏ.முஹம்மது சுல்தான் ரஷாதி, பட்டங்களை வழங்கி, பாராட்டிப் பேசினார். 
விழாவில், பேராசிரியர்கள் ஏ.அப்துல் ஹக்கீம், எம்.கிஃபாயத்துல்லாஹ், கே.என். அப்துர் ரஹ்மான், எழுத்தாளர் கே.எஸ்.ஹமீர் அம்சா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை, செயலாளர் ஷேக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் கவனித்தனர். வி.ஏ.எம்.ஜெஹபர்தீன் நன்றி கூறினார்.

Tags : Tiruvarur
ADVERTISEMENT
ADVERTISEMENT