திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் உரத்தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 நீடாமங்கலம் பகுதியில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்மழையால், பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து தொகுப்பு வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும், வைய களத்தூா் பழைய நீடாமங்கலம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளை உடனடியாக முடிக்கவேண்டும்.

நீடாமங்கலம் மேம்பால பணியை துரிதப்படுத்தவேண்டும், அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவா்களை நியமிக்கவேண்டும், நீடாமங்கலம் கால்நடை மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவா் பணியில் இருக்கவேண்டும், நீடாமங்கலம் பகுதியில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை சரிசெய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் கே. கைலாசம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலியபெருமாள், கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் ஜான்கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags : நீடாமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT