திருவாரூர்

கூத்தாநல்லூர்: கரோனா சீற்றம் குறைய வேளுக்குடியில் யாக பூஜை

DIN

கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அன்னை ஸ்ரீ அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், அமாவாசையை முன்னிட்டு, கரோனாவின் சீற்றம் குறைய சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்து, அனைவரையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது கண்ணுக் தெரியாத கரோனா தொற்று நோய். இதுவரை கணக்கில்லாதவர்கள் காலமாகியுள்ளனர். எண்ணிலடங்காதவர்கள் எழ முடியாத நிலையில் உள்ளனர். அப்படிப்பட்ட கொடிய நோயைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகிறார்கள். 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடியில் மிகப் பழமையானதும், பிரசித்திப்பெற்ற புராண கோயிலான அங்காளப் பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயில் பரம்பரை அறங்காவலர் வி.எஸ்.ரமேஸ்குமார் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டின் படி, கரோனாவின் சீற்றம் குறையவும், தமிழக மக்கள், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் உலக மக்களின் நன்மைக்காகவும் சிறப்பு யாக பூஜை செய்தனர்.

அங்காளப் பரமேஸ்வரி கோயில் நுழைவு வாயில் ராஜகோபுரம் முன்பு சுமங்கலிப் பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், தியாகராஜ குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் லலிதா மூல மந்த்ர நவாச்சரி ஹோமம், மிருத்து ஜெய ஹோமம் உள்ளிட்ட ஹோம மந்திரங்களை எழுப்பி, பூர்ணாஹூதி செய்தனர். 

தொடர்ந்து, கோயிலில் அங்காளப் பரமேஸ்வரி, விநாயகர், சிவன், பேச்சியாயி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன. சில பக்தர்கள் கொளுத்தும் வெய்யிலில், லெட்சுமாங்குடியிலிருந்து பாதயாத்திரையாக அங்காளப் பரமேஸ்வரி கோயிலுக்கு வந்தனர். சேலம், திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, பாண்டுக்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT