திருவாரூர்

வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம்

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு) மற்றும் உறுதிசெய்து கொடுத்தல் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவை விவசாயிகளுக்கு பாதகமானவை என்று பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில் திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கலிபெருமாள் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பி.கந்தசாமி, மாவட்டத் தலைவா் எம்.கலைமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மசோதா நகல்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அங்கிருந்த போலீஸாா் தண்ணீா் ஊற்றி, அதை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT