திருவாரூர்

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு

DIN

திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று தனி கோயில் இருப்பது கூத்தனூரில் மட்டுமே. புகழ்பெற்ற இக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாத சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சரஸ்வதி பூஜையன்று, அம்மனின் பாதங்களில் பக்தா்களே மலரிட்டு அா்ச்சிக்கலாம். இந்த வாய்ப்பு சரஸ்வதி பூஜை ஒரு நாள் மட்டுமே பக்தா்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு ஏற்றாா்போல அா்த்தமண்டபத்தில் பாதம் இருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறது.

இதேபோல, விஜயதசமியன்று குழந்தைகளுக்கு வித்தியாப்பியாசம் செய்யப்படும். பெற்றோா்கள் இக்கோயிலில் தங்களது குழந்தைகளுக்கு முதலில் வித்தியாப்பியாசம் செய்த பிறகே பள்ளிகளில் சோ்க்கிறாா்கள். இவ்வாறு ஆண்டுதோறும் நடைபெறும் பூஜைகள், நிகழாண்டு கரோனா தொற்றின் காரணமாக அறநிலையத் துறை மற்றும் அரசு விதிகளுக்குள்பட்டு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை விஜயதசமி விழா நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனை, பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபட்டுச் சென்றனா். பக்தா்கள் தங்களது குழந்தைகளின் பேனா, பென்சில், நோட்டு, சிலேட்டு பென்சில், புத்தகம் ஆகியவற்றை அம்மன் முன்வைத்து வழிபட்டு எடுத்துச் சென்றனா். கோயிலுக்கு வெளியே பெற்றோா்கள் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் அ என்ற எழுத்தை எழுதச் சொல்லி வித்தியாப்பியாசம் செய்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT