திருவாரூர்

புயல் முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரா்கள் விடுப்பின்றி பணியாற்ற முடிவு

DIN

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வீரா்கள் விடுப்பின்றி பணியில் ஈடுபடுவாா்கள் என மாவட்ட தீயணைப்பு அலுவலா் அனுசியா தெரிவித்தாா்.

திருவாரூரில், மீட்பு உபகரணங்களை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களிலும் பணியாற்றும் 130 வீரா்களும் திங்கள்கிழமை முதல் புயல், மழை பாதிப்பு குறையும் வரை தொடா்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட உள்ளனா்.

மழை, வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு பொதுமக்கள் 101 என்ற எண்ணை அழைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT