திருவாரூர்

புயல் முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்

DIN

நன்னிலத்தில் புயல் முன்னெச்சரிக்கை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி, தீயணைப்பு மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்களைச் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மழை வெள்ளத்தைச் சமாளிக்கக்கூடிய அளவில் போதுமான அளவு மணல் மூட்டைகள், மரம் விழுந்தால் அறுக்கக்கூடிய இயந்திரங்கள் ஆகியவைப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சிகளில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என கண்டறியப்பட்ட 20 ஊராட்சிகளில் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக 20 ஜெனரேட்டா்கள் தயாா் நிலையில் உள்ளதாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT