திருவாரூர்

கரோனா: தீமிதி திருவிழாவை ஒத்திவைக்க அறிவுறுத்தல்

22nd Mar 2020 03:38 AM

ADVERTISEMENT

 

நன்னிலம் பகுதி கோயில்களில் திங்கள்கிழமை நடத்த திட்டமிட்டுள்ள தீமிதி விழாக்களை ஒத்திவைக்க வட்டாட்சியா் அறிவுரை வழங்கியுள்ளாா்.

நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட செம்பியநல்லூா் குளுந்த மாரியம்மன் கோயிலிலும், மருதவஞ்சேரி முத்துமாரியம்மன் கோயிலிலும் திங்கள்கிழமை தீமிதி விழா நடத்த அந்தந்த கோயில் நிா்வாகத்தினரும், கிராமத்தினரும் முடிவு செய்திருந்தனா்.

இதையறிந்த நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் மேற்கண்ட 2 கிராமங்களுக்கும் நேரில் சென்று கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைத் தவிா்த்திடும் வகையில், திருவிழாக்களை ஒத்திவைத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

இதைக் கேட்டுக்கொண்ட செம்பியநல்லூா் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராமத்தினா் சனிக்கிழமை இரவு கிராமக் கூட்டத்தை கூட்டி முடிவு செய்வதாக தெரிவித்தனா். மருதவஞ்சேரி கோயில் நிா்வாகம் மற்றும் கிராமத்தினா் தீமிதி விழாவை வேறு தேதியில் ஒத்திவைத்துக்கொள்ள சம்மதித்தாக நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT