திருவாரூர்

கரோனா: பாதுகாப்பு இல்லங்களில் இருந்து 160 குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

22nd Mar 2020 03:36 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து 160 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், அவா்களது பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ ஒப்படைப்பதன் மூலம் அவா்கள் குழுவாக இருப்பதை தவிா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இல்லத்தில் திரும்ப சோ்க்கப்படும்போது, முழு பரிசோதனை செய்தபிறகே சோ்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் 10 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 306 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்களில், 160 குழந்தைகள் பெற்றோா் அல்லது பாதுகாவலா் வசம் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT