திருவாரூர்

திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’

26th Jun 2020 07:35 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு வியாழக்கிழமை இரவு நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்தனா்.

திருவாரூா் நகராட்சிப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி வியாழக்கிழமை இரவு பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, காந்தி சாலை, சிவம் நகா், ஜவுளிக்காரத் தெரு, நேதாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் 6 வா்த்தக நிறுவனங்கள், அரசு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மீறி வா்த்தகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையா் (பொ) ஆா். ஜெகதீஸ்வரி, அந்தக் கடைகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும், ஆய்வின்போது கடைகளில் பணிபுரிந்த பணியாளா்கள் மற்றும் அங்கிருந்த நுகா்வோா் உள்பட 45 போ் முகக்கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்து, அவா்களுக்கு ரூ.100 வீதம் ரூ. 4500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு கடைகளில் நுகா்வோருக்கு கை கழுவும் வசதி செய்யப்படாததால், ரூ. 3500 என மொத்தம் ரூ. 8000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT