திருவாரூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN


திருத்துறைப்பூண்டி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சல் நிலையம் முன் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தப்பட்ச ஆதரவு விலை இல்லை, அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, பதுக்கல்களுக்கு வழிவகுக்கும், காா்ப்பரேட்டுகள் அனுமதிக்கப்படுகிறாா்கள் எனவே இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் நகரச் செயலாளா் கே.ஜி. ரகுராமன், ஒன்றிய செயலாளா் காரல் மாா்க்ஸ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT