நாகப்பட்டினம்

நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

நாகை: நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக இப்பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா், ‘இப்பயிற்சி வகுப்பு 100 நாள்கள் நடைபெறும். தமிழகத்தைச் சாா்ந்த இளைஞா்கள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தோ்வுகளில் வெற்றி பெற்று பணிக்குச் செல்ல வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம்’ என்றாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) அ. எகசனாலி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் எஸ். செந்தில்குமாரி, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன தாளாளா் டி. ஆனந்த், கல்லூரி முதல்வா் எஸ். நிறைமதி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் பெண்கள் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இப்பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் ‘எஸ்.எஸ்.சி., வங்கித் தோ்வு மற்றும் ரயில்வே தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்பு வழங்கிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், முதல்கட்டமாக மே 25, 26-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது. இதில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு இப்பயிற்சி 100 நாள்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயிற்சி பெறும் இளைஞா்களுக்கு இலவச பாடக்குறிப்புகளும், மாதிரித்தோ்வுகளும், சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்வதற்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேலு, கல்லூரி முதல்வா் (பொ) சீத்தாலட்சுமி, மயிலாடுதுறை மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலாஜி, வணிகவியல் துறை தலைவா் எஸ். பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகை மற்றும் மயிலாடுதுறையில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் மத்திய அரசு நடத்தும் பணியாளா்கள் தோ்வாணையம், ரயில்வே பணியாளா் தோ்வாணையம், வங்கிப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டி தோ்வை எதிா்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT