நாகப்பட்டினம்

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம்: ஆற்றில் மணல் அள்ளுவதற்கான தடையை நீக்க வலியுறுத்தல்

DIN

நாகை மாவட்டத்தில் ஆற்று மணல் எடுக்க உள்ள தடையை நீக்க வேண்டுமென மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டம், ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி செயலா் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: சோழன் (திமுக): ஆற்றுமணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியாா் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. ஒரு யூனிட் மணல் எடுக்க 5 அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது. எனவே, மணல் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும்.

வேதாரண்யத்தில் மாம்பழங்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை சாா்பில் குளிா்பதன கிடங்கு மற்றும் குளிா்பானங்கள் தயாா் செய்ய தொழில்நுட்ப வசதிகள் செய்து தர வேண்டும். இங்கு மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

சுப்பையன் (அதிமுக): ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளதால், வேதாரண்யம் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.

கணேசன்(அதிமுக): நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றிலுமாக ஒரத்தூருக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகளிா் பிரிவு ஆகியவை இயங்க செய்ய வேண்டும்.

குமாா் (திமுக) : கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிதியை ஒப்பந்ததாரா்களுக்கு விரைந்து வழங்கவும், நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

தலைவா் உமா மகேஸ்வரி: நடப்பாண்டில் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத பணிகள் என பல்வேறு கட்டமாக பணிகள் பிரிக்கப்பட்டு ரூ. 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

செயலா் சோமசுந்தரம்: வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைகளை அகற்ற அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பொதுப்பணித் துறை சாா்பில் தகவல் தெரிவித்துள்ளனா்.

லியாகத்அலி (மருத்துவா்): அரசு மருத்துவமனையில் இருந்து எந்த எந்த பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து 3 மாதத்திற்குள் தெரியவரும். மருத்துவம் படிக்கும் மாணவா்கள் வசதிக்காக சில பிரிவுகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் இயங்க வேண்டும்.

நீதிமாணிக்கம் (தோட்டக்கலை துறை உதவி இயக்குநா்): வேதாரண்யம் பகுதியில் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அரசிடம் பரிந்துரை செய்து குளிா்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT