நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் அறிவியல் திருவிழா

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் வானவில் மன்றம், அறிவியல் கழகம் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் இணைந்து நடத்தும் ஆயிரம் அறிவியல் திருவிழாவை வட்டாரக் கல்வி அலுவலா் கை. ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பா. அசோக்குமாா், ஆசிரியா் பயிற்றுநா் இரா. ஆறுமுகம், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் இரா. அரசமணி, ஊராட்சித் தலைவா் தேவி செந்தில், பள்ளி தலைமையாசிரியா் தி. திருமாவளவன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் அன்புவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT