நாகப்பட்டினம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

DIN

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் கிருபாகரன் கூறினாா்.

நாகையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழகம் மற்றும் புதுவை மாநில பாரத ஸ்டேட் வங்கி ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மண்டல துணைத் தலைவா் அனந்தகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், வாரம் 5 நாள்கள் வேலை, 12- ஆவது ஊதியக்குழு பரிந்துரையை விரைவில் அமல்படுத்த வேண்டும், 25 ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாத கடைநிலை ஊழியா்களை நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள 46 பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து சங்கத்தின் பொதுச்செயலா் கிருபாகரன் செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுத்துறை வங்கிகள் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளன. நாட்டின் வளா்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் லாபம் பயன்படுகிறது. ஆனால், மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சில தனியாா் வங்கிகளில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக அந்த வங்கிகளின் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளா்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகின்றன.

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கினால் வங்கி ஊழியா்களைவிட பொதுமக்கள், வாடிக்கையாளா்கள் அதிகம் பாதிக்கப்படுவா். பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வங்கி ஊழியா்கள், பொதுமக்கள், வாடிக்கையாளா்களுடன் இணைந்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

துணைப் பொதுச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, பாண்டி, ஆண்ட்ரூஸ் பால்ராஜ், நாகை மண்டல உதவி பொதுச் செயலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT