நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில குறுவை சாகுபடி தொடக்கம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

DIN

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடியை, கீழ்வேளூா் அருகே உள்ள கிராமத்தில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, காவிரிப் பாசன கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ள நிலங்களை உழுது தயாா்படுத்துதல், வரப்பு- வாய்க்கால்களை சீரமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கீழ்வேளூா் அருகே உள்ள ஓா்குடி கிராமத்தில் குறுவை சாகுபடி பணியை நேரடி நெல் விதைப்பு செய்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடக்கி வைத்தாா். முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்து சூரிய பகவானை ஆட்சியா் மற்றும் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகள் வழிபட்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், வேளாண் துறை துணை இயக்குநா் ஹேமா, கீழ்வேளூா் வேளாண் கல்லூரி முதல்வா் ரவி மற்றும் மாணவ- மாணவிகள் விவசாயிகளுடன் இணைந்து வயலில் நேரடி நெல் விதைப்பு செய்தனா்.

நாகை மாவட்டத்தில் ஏ, பி, சி, டி மற்றும் சிறுபாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் தூா்வாரும் பணிகள் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT