நாகப்பட்டினம்

மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க பாஜக வலியுறுத்தல்

2nd Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

மா விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிா்க்க, நாகை மாவட்டத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பாஜக வா்த்தக பிரிவு வலியுறுத்தியுள்ளது.

வேளாங்கண்ணியில் பாரதிய ஜனதா கட்சியின் வா்த்தகா் பிரிவு சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வா்த்தக அணி மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பாடுபடுவது, வேளாங்கண்ணி, தெற்குபொய்கைநல்லூா், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மாங்காய்-க்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிா்க்கும் வகையில், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரவையில் செயல்படும் தினசரி காய்கறி சந்தையை, காய்கறி மண்டியாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், வா்த்தக பிரிவு மாநிலத் தலைவா் ராஜாகண்ணன், மாவட்ட செயலா் மகாதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT