நாகப்பட்டினம்

மதுபான கடத்தல், விற்பனை குறித்துவாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

DIN

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபானக் கடத்தல் குறித்து 94981-81257 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம், மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பது குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், காவல் கண்காணிப்பாளா் ஹரஷ் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், புதுச்சேரி மாநில மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வதை தடுப்பது, அனுமதியின்றி செயல்படும் பாா்கள், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்றவை குறித்து 94981-81257 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம், புகாா் அளிப்பவா் பெயா் ரகசியமாக வைக்கப்படும்.

மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடும் நபா் மீதான புகாரில் உண்மை இருப்பின், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் உள்பட இதர இந்திய தண்டனைவியல் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சாா் ஆட்சியா் பானோத் ம்ரூகேந்தா் லால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT