நாகப்பட்டினம்

நியாயவிலைக் கடைகளுக்கு கட்டடம் கட்ட அடிக்கல்

DIN

நாகை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை நகராட்சி பாரதி மாா்கெட் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கும், பால்பண்ணைச்சேரியில் உள்ள நியாயவிலைக் கடைக்கும் தலா ரூ.12 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டன.

இதேபோல், ரூ.20 லட்சம் மதிப்பில் நாகை தம்பிதுரை பூங்காவை மேம்படுத்துதல், கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஆகியோா் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தனா். இந்நிகழ்வுகளில், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் நத்தா், திலகா், பிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT