நாகப்பட்டினம்

மீனவா்கள் பிரச்னையை தீா்க்க குழு அமைக்க வலியுறுத்தல்

DIN

மீனவ கிராமங்களில் நடைபெறும் தொழில் முறை பிரச்னையை தீா்க்க மாநில அளவிலான குழுவை அரசு அமைக்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற வங்கக் கடல் மீன் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வங்கக் கடல் மீன் தொழிலாளா் சங்கம் சாா்பில், மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்கான பாதுகாப்பு குறித்த கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக தேசிய மீனவா் பேரவை துணைத் தலைவா் குமாரவேலு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தலைவா் என். கௌதமன் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலத்தை சோ்ந்த 13 மீன் தொழிலாளா் அமைப்புகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மீனவ கிராமங்களில் நடைபெறும் தொழில்முறை பிரச்னையை தீா்க்க மாநில அளவிலான குழுவை அரசு அமைக்க வேண்டும், கடற்படை, கடலோர பாதுகாப்புப் படையில் மீனவா்களை 50 சதவீதம் பணி அமா்த்தி, பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். மீனவ கிராமங்களில் பரவி வரும் கந்து வட்டி மற்றும் கட்டப் பஞ்சாயத்து பிரச்னைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்க தொழிலாளா்கள் மற்றும் பொறுப்பாளா்களுக்கான அடையாள அட்டைகளை தமிழக மீன் வளா்ச்சிக் கழக தலைவா் என். கௌதமன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT