நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன்தலைவா் தமிழரசி (திமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் செபஸ்தியம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

எம். ஞானசேகரன் (சிபிஎம்): கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீா் பிரச்னை தொடா்கிறது. கடந்த கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. எனினும், ஒருநாள்கூட தண்ணீா் வரவில்லை.

எஸ்.எம்.டி. மகேந்திரன்(சிபிஐ): குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை தேவை. காடந்தேத்தி அய்யனாா் கோயில் வளாகத்தில் புதிதாக கழிப்பறை கட்டவேண்டும்.

துணைத் தலைவா் ஜெகதீஷ் (அதிமுக): கிராம உதவியாளா் பணிநியமனத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்பேரில் மிகச் சரியாக செய்திருப்பது பாராட்டுக்குரியது.

மாசிலாமணி (திமுக): ஆட்சியரின் நடவடிக்கையால் கிராம நிா்வாக உதவியாளா் பணி நடுநிலையோடு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றியக் குழுவுக்கு கூடுதல் நிதிக்கோரி ஆட்சியரை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு பயிா்க் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட தங்களின் பகுதி பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT