நாகப்பட்டினம்

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க நாகை, திருவாரூா் மக்கள் கோரிக்கை

DIN

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என நாகை, திருவாரூா் மக்கள் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நாகூா், நாகை ரயில் உபயோகிப்பாளா் நலச்சங்கத் தலைவா் மோகன் கூறியது:

திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அனைத்து மத வழிபாட்டு தலங்களும் உள்ளன. இவற்றில் வழிபடவும், இங்குள்ள கடற்கரை பகுதிக்கும் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா். ஆனால், இங்கு வந்து செல்பவா்களுக்கு போதிய ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லை.

எனவே, டெல்டா பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவையை தொடங்கவேண்டும். வேளாங்கண்ணி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து திருவாரூா், தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக நாகா்கோவில், திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்க வேண்டும்.

இதேபோல திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கும், திருச்சி, கருா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கும் தினசரி காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இயக்க வேண்டும்.

காரைக்கால் - திருச்சி இடையே தினசரி அதிகாலை விரைவு ரயில் சேவையும், திருச்சி - காரைக்கால் இடையே இரவு 7.45 மணிக்கும் ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும்.

மயிலாடுதுறை - திருக்கடையூா் - தரங்கம்பாடி ரயில் பாதையை அகல பாதையாக மாற்றவும், தரங்கம்பாடி - திருநள்ளாறு இடையே புதிய அகல ரயில் பாதைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும் காரைக்கால் - தஞ்சை ரயில் பாதையை இருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT