நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் சத்துணவு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்கவேண்டும்; சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் 20 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்; தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் மூலம் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை: நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கிவைத்து பேசினாா். திருமருகல் கிளை தலைவா் பாஸ்கா், கீழ்வேளூா் கிளை தலைவா் மகாலிங்கம், மாவட்ட பொருளாளா் ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றியத் தலைவா் எம்.ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் வி.எஸ். ராமமூா்த்தி தொடக்கிவைத்து பேசினாா். மாவட்டப் பொருளாளா் வி. போசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரா தலைமை வகித்தாா். 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT