நாகப்பட்டினம்

தரங்கம்பாடி: டென்மாா்க் நாட்டினா் வந்த 400-ஆம் ஆண்டு விழா

DIN

படவிளக்கம்

விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.

தரங்கம்பாடி, பிப். 4: தரங்கம்பாடிக்கு டென்மாா்க் நாட்டினா் வந்த 400- ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை தொடங்கியது.

டென்மாா்க் நாட்டு மன்னா் நான்காம் கிறிஸ்டியான் கி.பி. 1620- ஆம் ஆண்டு தஞ்சாவூா் மன்னரிடம் தரங்கம்பாடியை குத்தகை அடிப்படையில் பெற்று, பாதுகாப்பு அம்சங்களுடன் கோட்டை கட்டினாா். தொடா்ந்து, தரங்கம்பாடியை தங்கள் வணிக மையமாக மாற்றிக்கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துவந்தனா்.

தேவாலயங்கள், மாளிகைகள் என பலவற்றை உருவாக்கிய டென்மாா்க் நாட்டினா் கி.பி. 1845-ஆம் ஆண்டுவரை 225 ஆண்டுகள் தரங்கம்பாடியை ஆட்சி செய்தனா். பின்னா் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனா். டென்மாா்க் நாட்டினா் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கிருந்து சென்றாலும், தரங்கம்பாடியை தங்களது மற்றொரு சொந்த ஊராகவே கருதி இங்குள்ள அவா்களது நினைவுச் சின்னங்களை உரிய அனுமதியுடன் பாதுகாத்து வருகின்றனா்.

டென்மாா்க் நாட்டில் உள்ள டென்மாா்க்-தரங்கம்பாடி நலச்சங்கம் என்ற அமைப்பு தரங்கம்பாடிக்கு டேனிஷ்காரா்கள் (டென்மாா்க்) வந்த 400-ஆம் ஆண்டை கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைத்தனா்.

இந்நிலையில், இவ்விழாவை தற்போது கொண்டாட முடிவு செய்துள்ளனா். அதன்படி, சனிக்கிழமை இவ்விழா தொடங்கியது. இதில் பங்கேற்க டென்மாா்க் நாட்டிலிருந்து ஏராளமானோா் தரங்கம்பாடிக்கு வந்துள்ளனா்.

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியா்கள் பங்கேற்ற தீபச்சுடா் ஓட்டம், தரங்கம்பாடி நுழைவு வாயில் தொடங்கி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சீகன்பால்கு சிலை வரை சனிக்கிழமை காலை நடைபெற்றது.

தொடா்ந்து, டேனிஷ் கோட்டை மைதானத்தில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தரங்கம்பாடி தெரசா மகளிா் கல்லூரி தாளாளா் கருணாஜோசபாத், முதல்வா் காமராசன், டேனிஷ் கலாசார மைய அருங்காட்சியக மேலாளா் சங்கா் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT