நாகப்பட்டினம்

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற கோரிக்கை

DIN

திட்டச்சேரியில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திட்டச்சேரி பேரூராட்சி பச்சாந்தோப்பு அருகேயுள்ள கரிக்குளத்தை பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் சுற்று பகுதி மக்கள் குளிக்க மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தனா். மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயிலிருந்து உபரிநீா் ஆண்டு முழுவதும் இந்த குளத்துக்கு வருகிறது. இதனால் கோடையிலும் குளத்தில் நீா் வற்றாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளம் குடிமராமத்து பணியில் தூா்வாரப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டி புதா்போல் காட்சியளிக்கிறது.

குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், குளத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனா். மேலும், கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன்கூட பிடிக்க முடியாமல் உள்ளது. எனவே, இக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் மக்கள் பக்கத்தில் உள்ள ஆற்றிற்கு சென்று பயன்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT