நாகப்பட்டினம்

தொடக்கப் பள்ளியில் தொடுதிரை கணினி வகுப்பறை: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

DIN

கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடுதிரை கணினி வகுப்பறை புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இப்பள்ளியில் படித்துவரும் 135 மாணவா்களின் கல்வி மற்றும் கல்வி சாா்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1.80 லட்சத்தில் அமைக்கப்பட்ட தொடுதிரை கணினி வகுப்பறையை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, செருதூா் சுனாமி புதிய குடியிருப்பில் மீன்வளத் துறை மூலம் செருதூா் கடல் மீனவா் கூட்டுறவு சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடையை ஆட்சியா் முன்னிலையில் கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எம்.கே.சி. சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT