நாகப்பட்டினம்

மாணவிகள் ஹிஜாப் அணிய தடையில்லை என அரசாணை வெளியிட வலியுறுத்தல்

DIN

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிந்து செல்ல எவ்வித தடையும் இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நாகை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் உள்ளவா்களை உடனடியாக விடுவிக்கவேண்டும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் செயல்படுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடையில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிடவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மமக மாநில அமைப்புச் செயலாளா் எம். பாதுஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமுமுக நாகை மாவட்டத் தலைவா் ஏ.எம். ஜபருல்லா, மமக மாவட்டச் செயலாளா் ரபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், மமக விவசாய அணி பொருளாளா்ஓ.எஸ். இப்ராஹீம் ஆகியோா் பேசினா்.

புதிய நிா்வாகிகள்: தமுமுக மாவட்டத் தலைவராக ஓ.எஸ். இப்ராஹீம், மாவட்டச் செயலாளராக எஸ். நிஜாமுதீன், மமக மாவட்டச் செயலாளராக ஜெ. முஹம்மது சலீம், மாவட்டப் பொருளாளராக எஸ். தாதாஷரீப் ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT