நாகப்பட்டினம்

கட்டிமுடிக்கப்பட்ட நியாயவிலைக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

DIN

பூம்புகாா் மீனவ கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த மீனவ கிராமத்தில் 1200 குடும்பத்தினா் வசித்துவருகின்றனா். இவா்கள் நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க ஏதுவாக கடை இயங்கிவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நியாயவிலைக் கடை பழுதடைந்தது. இதனால், அந்த கடை புயல் பாதுகாப்பு மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.

எனினும், புதிய நியாயவிலைக் கடை கட்டிக்கொடுக்க வேண்டி மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கத்திடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: பருவ மழை தொடங்க உள்ள நிலையில் உடனடியாக புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், இந்த கடைக்கு அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT