நாகப்பட்டினம்

வேதாரண்யம்: அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைத் திருவிழா

29th Nov 2022 02:54 PM

ADVERTISEMENT

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வட்டார அளவில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழாவின் போட்டிகள் இன்று (நவ.29) தொடங்கியது.

வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கலைத் திருவிழாவை நகர் மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

முதல்கட்டமாக நடைபெற்ற ஓவியம், களிமண் சிற்பம் உள்ளிட்ட கலைப் பிரிவு போட்டிகளில் 51 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 425 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் சிவ. அன்பழகன் தலைமையிலான குழுவினர் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT