நாகப்பட்டினம்

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை

DIN

திருமருகல் அருகே 2 இடங்களில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்டச்சேரி பேரூராட்சி மரைக்கான்சாவடியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவிவரும் குடிநீா் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகாண அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதன்படி, நாகை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதேபோல, உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி கட்டும் பணிக்கும் பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், எம்எல்ஏ முகமது ஷாநவாஸ் ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டினா்.

இதில், ஆத்மா திட்ட வட்டாரத் தலைவா் செல்வ செங்குட்டுவன், திருமருகல் ஒன்றிய ஆணையா் பாலமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், திட்டச்சேரி திமுக நகரச் செயலாளா் முகமது சுல்தான், திட்டச்சேரி பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திக்கா, பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், உத்தமசோழபுரம் ஊராட்சித் தலைவா் ஜனனி பாலாஜி, ஊராட்சி செயலாளா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT