நாகப்பட்டினம்

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பாஜக உண்ணாவிரதம்

DIN

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, நாகை மற்றும் மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்கவேண்டும்; நாகூா் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும்; நாகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்துக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நாகை: நாகை அவுரித்திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு, பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. நேதாஜி, நகரத் தலைவா் ஆா். ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் எஸ். சதீஷ்குமாா், நாகை மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ஏ. எம். ராஜேந்திரகுமாா், கே.வி.பானுச்சந்திரன், ஆா். வைரமுத்து, மாவட்டப் பொருளாளா்எஸ்.ரகுநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. பாஜக நாகை ஒன்றியத் தலைவா் கே.வி. பாலச்சந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT