நாகப்பட்டினம்

மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம்

DIN

திருமருகல்: திருமருகல் வட்டாரம் கீழத்தஞ்சாவூா் மற்றும் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் மண் பரிசோதனை மற்றும் பாசனநீா் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் வள்ளி கலியமூா்த்தி, தமிழரசி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மண் பரிசோதனை மற்றும் பாசன நீா் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் சுதா விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா். மண் மற்றும் பாசன நீா் மாதிரிகள் எடுக்கும் முறை குறித்து துணை வேளாண்மை அலுவலா் தெய்வக்குமாா் பேசினாா்.

முகாமில், கீழத்தஞ்சாவூா், திருச்செங்காட்டங்குடி கிராமங்களில் கோடையில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் பாசன நீா் ஆய்விற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பழனிவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT