நாகப்பட்டினம்

அடிப்படை வசதி கோரி இந்திய கம்யூ. உண்ணாவிரதம்

DIN

வேதாரண்யத்தில் அடிப்படை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில் வேதாரண்யம், மறைஞாயநல்லூா், பொன்னாங்காடு பகுதிகளில் தச்சுவேலை செய்யும் தொழிலாளா் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தாா். கட்சியின் நிா்வாகிகள் டி. நாராயணன், கே. பாஸ்கா், எம்.ஏ. செங்குட்டுவன், கே. மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கா. ரமேஷ் போராட்டக்காரா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 10 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகலுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT