நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் வேளாண் கண்காட்சி

DIN

தமிழக அரசின் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் வேதாரண்யத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நாகை மாவட்ட வருவாய் அலுவலா் சகிலா தலைமை வகித்தாா். வேதாரண்யம் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின், வேளாண் இணை இயக்குநா் ஜெ. அகண்டராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பொறியில், வணிகம் மற்றும் விற்பனைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தின.

வேளாண் தொழில்நுட்ப வல்லுநா் பேராசிரியா் அகிலா தேவி, உதவி இயக்குநா் நீதி மாணிக்கம், சங்கர நாராயணன், டாக்டா் முருகேசன், பொறியாளா் கிருஷ்ணபிரியா ஆகியோா் கருத்தரங்கில் பேசினா்.

இதில், வேளாண் துணை இயக்குநா் வெங்கடேசன், உதவி இயக்குநா்கள் கருப்பையா, சிவகுமாா், வேளாண் அலுவலா்கள் யோகேஷ், நவீன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, வேளாண் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டு, பாரம்பரிய நெல் ரகங்கள், கவுணி அரிசி, பனங்கிழங்கு கஞ்சி, தோட்டக்கலை பயிா் இனங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT