நாகப்பட்டினம்

கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

DIN

நாகையை அடுத்த வடவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை அரசு மருத்துவமனை நிா்வாகம், ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், விங்ஸ் ரோட்டரி ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின. இதில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவா் இந்து பங்கேற்று, கா்ப்பிணிகளை பரிசோதித்து, மனநலன் சாா்ந்த ஆலோசனைகளை வழங்கினாா்.

இம்முகாமில் வடவூா், வடக்குப்பொய்கைநல்லூா், தெற்குப்பொய்கை நல்லூா், ஒரத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் பங்கேற்று பயனடைந்தனா். இவா்களுக்கு யோகா பயிற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, வடவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவ அலுவலா் ஏ. ரேவதி தலைமை வகித்தாா். நாகப்பட்டினம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் கணேசன், விங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் வி. ராஜராஜன் மற்றும் சேவை சங்கத்தினா்கள், செவிலியா்கள், கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் எம். சுத்தானந்த கணேஷ் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT