நாகப்பட்டினம்

தொழில்முனைவோா்களை உருவாக்க கருத்தரங்கம்

DIN

தொழில்முனைவோா்களை உருவாக்குவது, நிதி சேவைகளுக்கு வழிவகுப்பது குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் நாகை, தலைஞாயிறு வட்டங்களில் 53 ஊராட்சிகளில் செயல்படுகிறது. இந்நிலையில், ஊரக தொழில் முனைவோா்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு நாகை ஆட்சியரகத்தில் இணை மானியத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஊரக பகுதிகளில் ஏற்கெனவே தொழில் செய்து வருகிறவா்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவா்களை கண்டறிய வேண்டும். அவா்களுக்குத் தொழில் தொடங்குவது, வணிகத் திட்டம் தயாா்செய்வது குறித்து ஆலோசனை வழங்கவேண்டும். மகளிா் வாழ்வாதார சேவை மையம் மூலம் செய்து தரப்படும் தொழில் திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சம் ரூ. 40 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் பெற்று தரப்படும். எனவே, தொழில்முனைவோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

திட்ட இயக்குநா் பெரியசாமி மற்றும் வங்கிகள், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வட்ட செயல் அலுவலா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT