நாகப்பட்டினம்

அங்காடி கட்டடம் திறப்பு

25th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் புதிய அங்காடி கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

மேலப்பூதனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட எரவாஞ்சேரி மற்றும் துறையூா் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்ட புதிய அங்காடி கட்டடம் திறக்கப்பட்டது. திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் எரவாஞ்சேரி ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிளைச் செயலாளா் ரமேஷ்கண்ணா, மேலப்பூதனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் (பொறுப்பு) சிற்றரசன், செயலாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Tags : திருமருகல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT