நாகப்பட்டினம்

பாகுபாடின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

DIN

சம்பா நெல் பருவ சாகுபடிக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 14-ஆவது வட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு, சங்கத்தின் வட்டச் செயலாளா் வி.எஸ்.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.துா்காம்பிகா தொடங்கி வைத்தாா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே.ராஜூ, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் நடராஜன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் மதிவாணன், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் அருள்விழி,உஷா,பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT