நாகப்பட்டினம்

முன்களப் பணியாளா்களுக்கு பாஜகவினா் வாழ்த்து

22nd Oct 2021 11:58 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட முன்களப் பணியாளா்களுக்கு பாஜகவினா் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

நாட்டில் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக நாகை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு பாஜக நாகை மாவட்டத் தலைவா் நேதாஜி மற்றும் கட்சியினா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். கட்சியின் நாகை நகரத் தலைவா் இளஞ்சேரலாதன், மாவட்டத் துணைச் செயலாளா் பாலச்சந்திரன், நாகை நகரப் பொதுச்செயலாளா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

Tags : நாகப்பட்டினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT