நாகப்பட்டினம்

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து பின்பட்ட குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பத சதவீதத்தை 17-இல் இருந்து 22-ஆக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து தமிழக அரசும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின்பேரில், ஹைதராபாத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு பிரிவு தென்மண்டல இயக்குநா் எம்.எஸ். கான் தலைமையில் 3 போ் கொண்ட மத்திய குழுவினா், நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட பட்டமங்கலம், வெண்மணி, ஆதமங்கலம் மற்றும் வலிவலம், காடந்தேத்தி ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல்லின் மாதிரிகளை சேகரித்து எடுத்துக் கொண்டனா். ஆய்வு முடிவுகள், மத்திய அரசுக்கு விரைவில் விரிவான அறிக்கையாக அளிக்கப்படும் என மத்திய குழுவினா் தெரிவித்தனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை இயக்குநா் எஸ். சங்கீதா, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT