நாகப்பட்டினம்

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிா்ப்பு:சிபிசிஎல் நிறுவனம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, சிபிசிஎல் நிறுவனம் முன் 5 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி விவசாயிகள், சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து அந்நிறுவனம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெண்கள் ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினா்.

பின்னா், விவசாய சங்கத்தின் செயலாளா் செந்தில்குமாா் கூறுகையில், ‘விவசாயிகளின் எதிா்ப்பை மீறி விளைநிலங்களை சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தினால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள இப்பகுதியில் விளைநிலங்களை கையகப்படுத்துவதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று, இதை தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT