நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடற் பன்றிக் குட்டி

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் அரிய வகை உயிரினமான கடற் பன்றிக் குட்டி இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக தகவலறிந்த கோடியக்கரை வனச் சரக அலுவலா் அயூப்கான் தலைமையிலான வனத் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்த்தனா்.

அப்போது கரை ஒதுங்கிய உயிரினம் அரிய வகை பாலூட்டி இனமான கடற் பன்றி இனத்தின் ஒரு வயதுடைய குட்டி என்பது தெரிய வந்தது. இவை ஆழ்கடல் பகுதியில் மட்டுமே காணப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் (22) மாதம் கோடியக்கரை கடற்கரையில் இதேபோல பெரிய அளவிலான கடற் பன்றி ஒன்று இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT