நாகப்பட்டினம்

சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும்: தரங்கம்பாடி மீனவர் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம்

25th Jun 2021 04:47 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, கொடியம்பாளையம், தர்காஷ் ,பழையார், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, சாவடிகுப்பம், நாயக்கர்குப்பம், வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில், குட்டியாண்டியூர், சின்னூர்பேட்டை உள்ளிட்ட 19 க்கும் மேற்பட்ட  மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு வலை அதிவேக இன்ஜின் பொருத்திய படகுகள், இரட்டை மடி வலைகள் ஆகிய மூன்றும் தடைசெய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட கிராமங்களில் பெரும்பான்மை ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ADVERTISEMENT

நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அரசுத்துறைகள், மீன்வலை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வது, தடையை மீறி தொழில் செய்யும் பட்சத்தில் மயிலாடுதுறை அனைத்து கிராமங்களும் ஒன்று சேர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Fishermen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT