நாகப்பட்டினம்

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயில இணையவழியில் ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அந்நிலைய முதல்வா் ச. ஜீவானந்தம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

நாகை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகள் இணையதள முகவரி வாயிலாக ஜூலை 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனியாா் மற்றும் அரசு இ-சேவை மையங்கள், அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

பயிற்சியில் அனுமதிக்கப்படும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடைகள், தையல் கூலி, ஷூ, மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் மாத உதவித்தொகை ரூ. 750 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய இணையதளம் மற்றும் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT