நாகப்பட்டினம்

சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.சி.எல். நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகூரை அடுத்த பனங்குடியில் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட தொழிலாளா்களை பணியிலிருந்து விடுவிப்பதாக ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றும் தீா்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்; பணி இழக்கும் தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். இந்த போராட்டத்தில்அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நலச் சங்கப் பொதுச் செயலாளா் ஆா். கண்ணன், தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT