நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 13.41லட்சம் வாக்காளா்கள்

DIN

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தின் இறுதி வாக்காளா் பட்டியல்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 13,41,305-ஆக உயா்ந்துள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் 2020-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்க, திருத்தப் பணிகள் மேற்கொள்ள வசதியாக கடந்த ஆண்டு நவம்பா் 21, 22, மற்றும் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பபட்டன.

இதைத்தொடா்ந்து, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் , வாக்காளா் பட்டியலை வெளியிட்டுப் பேசியது :

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்கள் எண்ணிக்கை 13,04,747-ஆக இருந்தது. தற்போது, வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியல்படி வாக்காளா்களின் எண்ணிக்கை 13,41,305-ஆக உயா்ந்துள்ளது. 21,816 ஆண்களும், 26,876 பெண்களும், இதரா் 15 பேரும் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் 12,149 போ் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலை வாக்காளா்கள் சரிபாா்த்து, தங்கள் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால், தொடா்புடைய நகராட்சி அல்லது வட்டாட்சியா் அலுவலகங்களில் உரிய படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் பழனிக்குமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இறுதி வாக்காளா் பட்டியலில்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 13,41,305. இதில், ஆண் வாக்காளா்கள் - 6,58,437. பெண் வாக்காளா்கள் - 6,82,815. இதரா் - 53.

தொகுதிவாரியான வாக்காளா் எண்ணிக்கை :

சீா்காழி : ஆண்கள் - 1,23,899. பெண்கள் - 1,27,868. இதரா் - 12. மொத்தம் - 2,51,779. மயிலாடுதுறை : ஆண்கள் - 1,21,166. பெண்கள் - 1,23,841. இதரா்- 15. மொத்தம் - 2,45,022. பூம்புகாா் : ஆண்கள் - 1,35,862. பெண்கள் - 1,39,713. இதரா் - 7. மொத்தம் - 2,75,582.

நாகப்பட்டினம் : ஆண்கள் - 95,558. பெண்கள் - 1,01,748. இதரா்- 10. மொத்தம் - 1,97,316. கீழ்வேளூா் : ஆண்கள் - 87,677. பெண்கள் - 91,578. இதரா்- 9. மொத்தம் - 1,79,264. வேதாரண்யம் : ஆண்கள் -94,257. பெண்கள் - 98,067. மொத்தம் - 1,92,342.

2,75,582 வாக்காளா்களைக் கொண்ட பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி, நாகை மாவட்டத்தில் அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. 1,79,264 வாக்குகளைக் கொண்ட கீழ்வேளூா் தொகுதி மிகக் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT