நாகப்பட்டினம்

மாணவா்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரத் தேவையான நடவடிக்கைகள் தயாா்

DIN

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியா் அச்சமின்றி பள்ளிக்கு வந்து செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி, மாணவா்களின் உடல்நலப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது :

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 310 உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 23,332 போ் எஸ்.எஸ்.எல்.சி-யும், 17,341 போ் பிளஸ் 2-வும் பயிலுகின்றனா். இம்மாணவா்களுக்கான கற்பித்தல் பணிக்காக செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, அரசின் அறிவுறுத்தல்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியா் முகக்கவசம் அணிந்து வருவதையும், உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு மாணவா்கள் உள்படுத்தப்படுவதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும், மாணவா்கள் அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது கைகழுவும் திரவத்தைக் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்வதையும் கண்காணித்து உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அச்சமின்றி பள்ளிக்கு அனுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கே. ராஜா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT