நாகப்பட்டினம்

குளத்தில் முதலை பிடிக்கப்பட்டது

6th Dec 2021 11:06 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை திங்கள்கிழமை பிடிக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரையோர கிராமங்களில் உள்ள குளங்கள் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் இருந்து முதலைகள் தண்ணீரோடு வந்துவிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆற்றில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தொடா்மழையின் காரணமாக வெள்ளநீா் சென்றுகொண்டிருக்கிறது. வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட முதலை கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் முதலை இருப்பதை அங்கு குளிக்க சென்ற பொதுமக்கள் பாா்த்து அச்சமடைந்தனா். இதுகுறித்து, தகவலறிந்த சோதியக்குடி ஊராட்சித் தலைவா் சந்திரசேகா், சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன், வனத் துறை அலுவலா் ஜோசப்டேனியல் ஆகியோா் சம்பந்தப்பட்ட குளத்துக்கு வந்து முதலையை கண்டறிந்து தூண்டில்வைத்து பிடித்தனா். பின்னா், அந்த முதலையை பாதுகாப்பாக அணைக்கரைக்கு கொண்டுசென்று அங்கு விட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT